ஞான பீடம்
இலக்கியம் · உரையாடல் ஞானபீடம் விருது : எங்கள் கண்டனங்கள் அகழ் வைரமுத்து இந்த வருடத்துக்கான ஞானபீட விருது கவிஞர் வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்திய அளவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் உயரிய விருது இது. நவீன தமிழ் இலக்கியச் சூழலில், யாருமே வைரமுத்துவை நல்ல கவிஞராகவோ அல்லது புனைவாசிரியராகவோ கருதுவதில்லை. அவர் எழுத்து நுண்ணுணர்வில்லாதது. வைரமுத்துவின் கவிதைகள் வானம்பாடி மரபை சேர்ந்தவையாக அடையாளம் காட்டப்படுகின்றன. எழுத்து, வானம்பாடி இவ்விரு பத்திரிக்கைகள் வழியே இருவேறு அழகியல்கள் தமிழ் கவிதையில் நிலைப்பெற்றன. எழுத்துவழி அழகியலே இன்று தமிழ் இலக்கியச் சூழலில் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாக உள்ளது. எவ்வித பாசாங்குமில்லாமல் வாழ்க்கையை, மனித குணாதிசயங்களை, உள அடுக்குகளை, கருத்தியல்களை – கூர்மையுடன் – விசாரிப்பதே இவ்வகை ஆக்கங்களின் குறிக்கோள். அதற்கு நுட்பமான எழுத்துமுறை தேவைப்படுகிறது. அலங்காரங்களில்லாத தனி வாசிப்புக்குரிய அந்தரங்கமான மொழிநடை தேவைப்படுகிறது. வாசக இடைவெளிகளுக்கு அதில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. எதையும் நேரடியாக பகிர்வதைக் காட்டிலும் குறிப்புணர்த்துவதையே முதன்ம...