Posts

Showing posts with the label அனுபவம்

கடவுளைக் காண !!!

பெரிய கல்யாண மண்டபம் . விழா ஏற்பாட்டாளர்கள் 1000 நபர்கள் அமரும் அளவிற்கு ஏற்பாடு செய்து இருந்தார்கள். ஒலிப்பெருக்கி ஒளித்து கொண்டே இருந்தது. யார் கடவுள் ? கடவுளைப் பற்றிய ஒரு புரிதல்..... எங்கே நாம் செய்கிறோம் ? வாழ்நாள் பயன் தான் என்ன! என்பது போன்ற வாசகம் பொருந்திய விளம்பரங்கள் தெரு ஓரம் வரிசையாக வைக்கப்பட்டு இருந்தன. இதை எல்லாம் பார்த்து விட்டு இது ஒரு ஆன்மிக நிகழ்வு என்று கருதி கட்டிடத்திற்குள் நுழைத்தான் அவன். சரியாக மாலை 6 மணிக்கு விழா ஆரம்பம் ஆகி இருந்தது. முன் இருக்கைகள் சில காலியாக இருந்ததால் அங்கு சென்று அமர்ந்தான். எல்லா சம்பிரதாயங்களும் முடிந்து நட்சத்திர பேச்சாளர் பேச ஆரம்பித்தார். தனக்கு கொடுக்கப் பட்ட "கடவுளைக்காண " பற்றி பேச அழைத்த விழாக் குழுவினர் எல்லாருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். கடவுள் என்பது ஒரு பொருளா? கருத்தா ? எண்ணமா ? செயலா? அல்லது கற்பனையா ! ? என்று நமக்கு ஒரு ஐயப்பாடு அவ்வப்போது நமக்கு எழக்கூடும். அல்லது இந்த விழா முடிந்த பிறகு, பல கேள்விகளுக்கு உங்களை நீங்களே உட்படுத்திக் கொள்வீர்கள். இது இருக்கட்டும் ; முதலில் 'உங்களைப் பற்றி' எத்தன...

வாழ்க்கை என்பது எவ்வளவு தூரம்?

எவ்வளவு தூரம்; எவ்வளவு தூரம்; எவ்வளவு தூரம், அளக்க முடியவில்லை; எல்லை இல்லா வாழ்வு; எதற்கு இப்படி அலைகிறது; மனமே பேதம் கொள்ளாதே; உன் குணம் எனக்கு தெரியும். உறவை , நட்பை , பழக்க, வழக்கத்தை , மாண்பை, மதிப்பை, மதி இழக்க செய்ய வல்ல, ஆற்றல் உனக்கு இருக்கிறது. என்ன செய்ய ? பாவி மனிதர்கள் நாங்கள் ! படைக்கப்பட்டோம், வளர்க்கப்பட்டோம், வாழ்வதற்காக வழிகாட்டப்பட்டோம். பார்வை எல்லாம் பறக்கின்றன. நான் மற்றும் ஒன்றை ஆளாய் நிற்கிறேன். என்ன செய்ய...... இனி என்ன செய்ய முடியும்... என்ன செய்ய வேண்டும்... சொல்- உன்னிடமே கேட்கிறேன். பிறப்பு என்பது ஜனனம். தெரியாமல் நடக்கிறது. இறப்பு என்பது மரணம். தெரிந்தே நடக்கிறது. நடப்பதை நிறுத்த முடியாது. முயற்சிக்கிறோம்; முடிந்த வரை போராடுகிறோம். பிரிவும் இயற்கையே !! வாழ்வும் இயற்கையே!! இறப்பும் இயற்கையே!! இதில் ஏங்க என்ன இருக்கிறது ?? சொல்ல எளிதாக இருக்கிறது - நினைத்தால் சுடுகிறது. எவ்வளவு நாள் இந்த எண்ணங்களை சுமப்பது ? சுமப்பது சுவை ; அப்படியானால் எதை சுமப்பது, எதிர் காலத்தையா ? நிகழ் காலத்தையா ? இறந்த காலத்தையா? சொல் மனமே சொல் . என் மனசு எனக்கு தெரியவில்லை. என் இதயம் ...