விஞ்ஞானி சத்யேந்திரநாத் போஸ்
கடவுளின்துகள் என்ப்படும் மூல துகள்களை கண்டறிந்த இந்திய விஞ்ஞானி சத்யேந்திரநாத் போஸ் அவர்களின் 131வது பிறந்தநாள் இன்று ❤️🇮🇳🙏
பிரம்மாண்டம் அணுக்களால் ஆனது என்று அறிந்த அறிவியல், அணுவுக்குள்ளும் ஒரு பிரம்மாண்டம் இருந்ததை அறிந்து மலைத்தது. அணுவிலும் சிறியதாய் ஏராளமான நுண்ணணுக்கள் இருப்பது பரிசோதனைகள் மூலம் நிரூபணம் ஆகியது.
இந்த நுண்ணணுப் பட்டாளம் மொத்தத்தையும் இரண்டு வகைத் துகள்களுக்குள் அடக்கி வரையறை செய்தனர் குவாண்டம் இயந்திரவியல் விஞ்ஞானிகள்.. புரோட்டான், நியூட்ரான், எலெக்ட்ரான் மற்றும் அவையொத்த நிறை(mass) உள்ள துகள்கள் அனைத்தும் ஃபெர்மியான்களாக(Fermions) வரையறை செய்யப்பட்டன.
நிறை அற்ற துகள்களுக்கு போஸான்கள் (bosons) என்று பெயரிடப்பட்டது. இதில் சுவாரஸ்யமான செய்தி என்னவென்றால் நிறை உள்ள ஃபெர்மியான் துகள்கள் தங்களது நிறையை நிறையற்ற போஸான் துகள்களிடம் இருந்தே பெற்றுக் கொண்டன!
இந்த விசித்திர போசான்களுக்கு எப்படி அந்தப் பெயர் வந்தது என்பது இன்னொரு சுவாரஸ்யமான கதை. சத்யேந்திரநாத் போஸ் என்னும் இந்திய விஞ்ஞானி வங்காளத்தைச் சேர்ந்தவர். ஜகதீஸ் சந்திர போசின் பிரதான மாணவரான இவர்,1920-களில் டாக்கா பல்கலைக் கழகத்தில்(தற்போதைய பங்களா தேஷ்) இயற்பியல் பேராசிரியராகப் பணி புரிந்து கொண்டிருந்தார். அப்போது அவர் ஜெர்மனியில் இருந்த ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு ஒரு கட்டுரையை அனுப்பிக் கூடவே ஒரு கடிதமும் இணைத்து அனுப்பினார்.
அந்தக் கட்டுரையில் ப்லாங்கின் கதிர் வீச்சு விதியைப்(Planck’s’ radiation law) பண்டைய இயந்திரவியலின்(Classical Mechanics) துணை இன்றி முற்றிலும் நவீனக் குவாண்டம் இயந்திரவியலைக் கொண்டே, ஒரு புதிய வகைத் துகளை வைத்து விளக்க முடியும் என்று சமன்பாடுகளின் மூலம் நிரூபித்திருந்தார்.
இதை கண்டறிந்த போது
திரு.போசின் வயது முப்பது.
அந்த அணுகு முறை ஐன்ஸ்டீனுக்குப் பிடித்துப் போகவே, அதை ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்து, ஜெர்மனியில் அப்போது பிரபலமாய் இருந்த ஓர் இயற்பியலுக்கான சஞ்சிகையில் வெளியிட்டார்.
அந்தக் கட்டுரை அன்றைய செல்வாக்கு வாய்ந்த அறிவியல் நிபுணர்களைக் கவர்ந்தது மட்டுமல்லாமல், அத்தகைய துகள்களின் இருப்புக்கான சாத்தியக் கூறுகளையும் மிகவும் திருப்திகரமான வகையில் முன்வைத்தது.
போஸைக் கௌரவிக்கும் வகையில் அந்தத் துகளுக்குத்தான் போஸான் என்று பெயர் சூட்டப்பட்டது. அவ்வகைப் போஸான்கள் இருப்பது பின்னால் பரிசோதனைகளின் மூலம் நிரூபிக்கப்பட்டது. இதில் வேதனைக்குரிய விஷயம் என்றால், மற்ற ஐரோப்பிய விஞ்ஞானிகள் பேசப்பட்ட அளவுக்கு எஸ்.என்.போஸ் பேசப்படவில்லை.
அதோடு மட்டுமின்றி, போஸான் துகள் குறித்துத் தொண்ணூறுகளின் இறுதியில் நடந்த ஒன்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிகளுக்கு நோபல் பரிசுகள் அளிக்கப் பட்ட போதிலும், அதற்குப் பெயர் வர மூலகாரணமாய் இருந்த இந்திய விஞ்ஞானி போஸை நோபல் கமிட்டி திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.
இராம ஸ்ரீநிவாஸன் #physics
#indianscientist ❤️🇮🇳🚩🙏
வாழ்க இந்திய விஞ்ஞானி எஸ்.என்.போஸ் 🙏 #ஜெய்ஹிந்த் #JaiHind #indianscientist #timetravel
Comments
Post a Comment