என் அன்பு கல்கி வாசகர்களே !!

என் அன்பு கல்கி வாசகர்களே !!

வணக்கம்,

வரலாறு அறிவோம் !!!

கொஞ்சம் வரலாறு ! கொஞ்சம் படிப்பு !!

நமக்கெல்லாம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திய காரண கர்த்தா யார் என்றால் (1980 க்கு முன்) உடனே நம் நெஞ்சை ஆட்கொள்ளும் ஒரு தெய்வம் கல்கி அவர்கள் .

அவர் வாழ்ந்த மணல்மேடு கிராமத்தை நான் சென்று பார்த்து இருக்கிறேன்.

நான் குழந்தையில் வசிப்பதால், இந்த செய்தியை உங்களுக்கு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். மாதத்திற்கு ஒரு முறை கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வு சங்கம் மூலம் என் நண்பர் திரு கோபிநாத் (63 81 78 60 37 ) அவர்கள் தஞ்சையில் இருந்து புறப்பட்டு கடலூர் வரை ஒரு வரலாற்று சுற்றுலா நடத்தி ராஜராஜன் புகழை பரப்பி தமிழர்கள் வாழ்வில் அறத்தையும், பெருமையையும் பறைசாற்றி நம் பண்பாடுகளை காத்து சிறம்பட பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

இதன் மூலம் பல்லாயிரம் சுற்றுலாப் பயணிகள் தங்கள் வாழ்வியல் பயனை பயணம் மூலம் அனுபவித்து "பொன்னின் செல்வன் " படைத்த "கல்கியாரையும் ", ஆயிரம் அகவை கண்ட "ராஜராஜனின் " பெருமையையும், "ராஜேந்திர சோழனின் " வரலாற்று உண்மையையும் , தமிழ்நாட்டிற்கும் உலகிற்கும் தெரியப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த முன்னோட்டத்துடன் என் மன ஓட்டத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நான் வரலாற்று ஆய்வாளன் இல்லை;மாறாக என் மனதை ஆராய்ந்து அறிந்து கொள்ள முயலும் ஒரு விழிப்புணர்வுள்ள ஜீவன்.

நான் எந்த முன் முடிவுகளுடன் இந்த கட்டுரையை எழுதவில்லை....

என் மனதிற்குப் பட்ட, உணர்ந்த,உணர்த்தப்பட்ட,மனதால் பாதிப்புக்கு உள்ளான , அனுபவத்தை என் எழுத்தால் ஆராதனை செய்து என் உள்ளத்தை மகிழ்விக்க முயல்கிறேன்.

இதில் உங்கள் பயணத்தையும் என்னுடன் பகிர்ந்தால் நாம் எல்லோரும் ஒரு சமூகமாக உறவாடி ஒரு உன்னத மானுடம் அடைய முயல்வோம். இது ஆசை அன்று !பேராசை தான் !!

இதோ என் தொடக்கம் :

வயது 1 முதல் 9 வரை ...

சரியாக எனக்கு ஞாபகம் இல்லை; யாருக்குத்தான் ஞாபகம் இருக்கும் தாம் பிறந்ததை ;தாமே நினைத்துக் கொள்ள!
பிறந்தது குடந்தை.

முதல் நாள் பள்ளிக்கு சென்றது ஞாபகம் இருக்கிறது. ஒரே அழுகை ;என் அப்பா என்னை சமாதானம் செய்கிறார்;என் பெரியப்பா என்னை அரவணைத்து பேசுகிறார். எல்லாம் இப்போது நினைத்தாலும் பெரிய பாக்கியமாக கருதுகிறேன். அழுதது நிஜம் -கடவுளுக்கு நன்றி.

என் கடைசி சகோதரன் பிறப்பு: பிறந்து சில மாதங்கள் என்று நினைக்கிறேன் தரையில் கிடக்கிறான். என் அடுத்த சகோதரன் அவன் வயிற்றில் உட்காருகிறான்.இது எனக்கு ஞாபகம் இருக்கிறது.வீடே அல்லோலப்படுகிறது.

இதுதான் காரணம் என்று என் முதல் சகோதரனை எங்கள் பக்கத்து வீட்டு பெரியப்பா "தத்து " எடுக்கிறார்.எவ்வளவு எளிதான காரியம் அப்போது (காலம் 1961 முதல் 1970 வரை)

நான் முதல் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை அரசாங்க கடை நிலைப்பள்ளியில் பயின்றேன்.இது எங்கள் தெருப்பள்ளிக்கூடம்.

எங்கள் தெருவைப் பற்றி கூறினால் சற்று பெருமையாக இருக்கும் .அதன் மூலம் எல்லோரும் பெருமையும் படலாம்.

இதோ எங்கள் தெரு மற்றும் ஊர்  பற்றி ....


சோழநாடு சோறுடைத்து என்பது பழமொழி. எனவே சோறுடைத்த நாடு “சோற நாடு” ஆகிப் பின், சோழ நாடாகியது என்பர்.

இங்கே செவி வழி கேட்ட, உணர்ந்த செய்திகளை பதிவிடுகிறேன்.

குடந்தையைச் சுற்றி உள்ள சிற்றூர்களின் பெயர்கள் அதற்கான காரணங்களை ஆராயும்போது ஒரு ஒற்றுமையை காண முடிகிறது.

அவ்வாறே சோழ நகரத்திற்கு ‘பழையாறை’ தலை நகரமாக விளங்கி இருக்கிறது. அதற்கு ஆதாரமாக அரண்மனைக்காரத்தெரு, ஆரியப்படையூர், காவல்காரன் தெரு, பம்பப்படையூர் போன்ற பெயர் உடைய தெருக்களும், கிராமங்களும் கோயில் நகரை அலங்கரிக்கின்றன.

மேலும் சில விவரங்கள்:-
‘மாதுளம் பேட்டை’ என்பது “மகாதளம் பேட்டை” என்ற சொல்லின் மருவுதல் எனக் கொள்ளலாம்.

மகா தளம் பேட்டை அருகில் ஆனைக்காரன்பாளையம் உள்ளது.
இதுவே யானை படைக்கான தளமாகவும் இருந்து இருக்கக் கூடும்.

எனவே நம் முன்னோர்கள் பல படைகளை அமைப்பதற்கு மகா தளம் அமைத்து அதை “பேட்டை” என்று அழைத்தனர்.

மேலும் குடந்தையையின் வரலாற்று, தொழில் மற்றும் வணிகச் சான்றுடைய அடையாளங்கள்:
1. பழைய அரண்மனைத்தெரு,
2. கம்பட்ட (நாணயம், நிதி தொடர்புடைய) விஸ்வநாதர் தெரு,
3. பஞ்சுக்காரத்தெரு,
4. நெல்லுக்கடைத்தெரு,
5. வேம்படித் தெரு (பித்தளை வியாபாரம்)
6. காசுக்காரத்தெரு,
7. அந்தணர்கள் குடியிருப்பு பகுதிகள்
A. சோலையப்பன் தெரு,
B. பக்த புரித்தெரு,
C. வேத பாடசாலை போன்றவை.
அரசலாற்றங்கரையில் நெசவாளர்கள் குடியிருப்பு நடந்து இருக்கிறது. அங்கே ‘சவுராஸ்டிரா மக்கள்’ அதிகம் வாழும் பகுதி. அவர்கள் ஒன்று சேர்ந்து ஆரம்பித்தது தான் - “ராஜ ராஜேந்திரப் பேட்டை கூட்டுறவு சங்க பண்டகசாலை.”
இப்படியாக செம்படியான் தெரு என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆக சோழ மன்னர்கள் “குடிகளாக மக்களை” பிரித்து அவர்கள் செய்யும் தொழிலை வைத்து குடி அமர்த்தினர் என்று சொல்லலாம்.

ஆரிய படையூர் என்ற சிற்றூரில் “சோழன் மகாதேவின் சிலை” இருப்பதாக கூறுகின்றனர்.

உடையாளுர் - பட்டீஸ்வரம் போகும் வழியில் சில சிவன் கோயில்களை பார்க்கலாம் - பாழடைந்த நிலையில்!!
அவைகள் யாவும் ஊர் “பிரபுக்கள் மற்றும் நிழக்கிழார்” வாழ்ந்து மறைந்த நினைவுச்சின்னங்கள்.

இது மந்திரிகள் போன்றோரையும் உள் அடக்கும். அவர்கள் ராஜராஜ சோழனிடம் (ராஜாவிடம்) பணியாற்றியதற்கு மரியாதை நிமித்தமாக உருவாக்கப்பட்டவை என்று கூறப்படுகிறது.

மேலும் பல உதாரணங்கள்:
இன்றும் ‘திருவாடுதுறை ஆதீனத்தில் உள்ள தென்னத்தோப்பில் குட்டிக் கோயில்களை பார்க்கலாம்’ - இவைகள் யாவும் ஆதீன கார்தாக்கள் மறைவுக்கு பிறகு ஏற்படுத்தப்பட்ட நினைவுச் சின்னங்கள்.

நன்றி :
“சிவகுருநாதன் செந்தமிழ் நூல்நிலையம்.”

எங்கள் ஊர் ! எங்கள் பெருமை !!
நான் இருக்கும் தெரு நாணயக் காரத் தெரு - சோழர் காலத்தில் நாணயம் தயாரிக்கும் தொழில் எங்கள் தெருவில் நடந்தது .

இப்போதும்  ஞாபகம் இருக்கிறது நான் இரவில் என்  அப்பாவிடம் தான் படுத்துக் கொள்வேன். அப்போது நான் அம்மணமாக உறங்குவேன் .யாராவது வந்தால் உடனே கால் சட்டையை மாட்டிக் கொள்வது என் பழக்கமாக இருந்தது .எந்த விரசமும் அப்போது இல்லை .ஏன் அப்படி இருந்தேன் ?எனக்கு தெரியவில்லை ! !எல்லோரும் அப்படி இருந்தால் எந்த வன்முறையும் இருக்காதோ !!.கலாச்சாரம் சீர்கெட்டு விட்டது என்று கூறுவார்கள் .
நான் அந்த விவாதத்துக்குள் வரவில்லை .
என்னை விட்டு விடுங்கள் !!

1970 முதல் 1981 வரை....

சென்னை :-சென்னை பரங்கிமலை தனியார் பள்ளியில் ஐந்தாவது சேர்ந்தது ;
அங்கேயே 11 வது வரை படித்தது.

ஆறாவது படிக்கும்போது இன்றும் ஞாபகம் இருக்கிறது .ஒரு சமயம் பள்ளிக்கு வெளியே மழை பெய்து கொண்டிருந்தது.அதை நான் கவனிக்கவில்லை.வகுப்பு முடிந்ததும் நான் மழையைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன்.இந்த ஆச்சரியம் தான் என்னை ஆசிரியர்களிடம் ஆச்சரியப்பட செய்தது.

அப்படி ஒன்றும் நான் எல்லோரும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு படிக்கவில்லை. ஒரு சராசரி மாணவன்.

மேலே கண்ட என் ஆச்சரியம் கலந்த நிகழ்வு என்னை ஆசிரியர்களிடம் வசப்படுத்தி என்னை சற்று படிப்பவனாக கொஞ்சம் கொஞ்சமாக மாற்றியது.


இது இயற்கையின் செயல் .என்னுடைய செயல் என்று  சொல்ல எதுவும் இல்லை. எனக்கு இதில் எந்த பங்கும் இல்லை. நான் சொல்வது உண்மைதானே !

9 முதல் 11 வரை...

அந்த இயற்கை என்னிடம் வேறு விதமாக வேலை செய்தது.அந்த காலத்தில் தெருக்களில் சோவியத் யூனியன் புத்தகங்கள் மிகக்குறைந்த விலையில் தெருக்களில் தள்ளுவண்டியில் வைத்து விற்றுக் கொண்டிருப்பார்கள்.

புத்தகங்கள் நல்ல வடிவமைப்பிலும்,நல்ல நல்ல சித்திரம் வரைந்தும் இருக்கும்.

விலையோ குறைவு !! படிப்பதற்கென்றால் யார் தான் தடை சொல்வார்கள் !!

எல்லா புத்தகங்களும் ரூபாய் மூன்று 3 ரூபாய் 5 வரை தான் இருக்கும்.

அப்போது நான் வாங்கியது. இவர்கள் எத்தனை ஜாம்பவான்கள் என்று கூட தெரியாது. இவர்கள் முகத்தைப் பார்த்து வாங்கி சிலாகித்தது தான் நான் கண்ட புத்தகங்கள்.

கீழே கண்ட என் வாசிப்புகள்...

காரல் மார்க்ஸ் -தாஸ் கேப்பிடல்

மேக்சிம் கார்கி -தாய்

மகாத்மா காந்தி -சத்திய சோதனை

விவேகானந்தர் -எழுமின் ! விழிமின் !! , 
                                உழைமின் !!

இந்து மகா சபா வெளியீடு :
பக்தியோகம் ,கர்மயோகம் ,ஞான யோகம்.

இவற்றையெல்லாம் சொல்கிறேன் நான் அப்போது சத்தியமாக படித்தேன்.ஆனால் ஒன்றும் புரியவில்லை.

ஒன்று மட்டும் பிறகு புரிந்தது; எது புரியாததோ அது பிறகு புரியும் ; எது புரிகிறதோ அது பிறகு புரியாமல் போகும் -இதுதான் வாழ்க்கை.


வாழ்க்கை எனக்கு கற்றுக் கொடுத்த பல பாடங்களில் இதுவும் ஒன்று.

என்னைச் சுற்றி புத்தகங்கள் இருப்பது எனக்கு பெருமையாக இருந்தது.நண்பர்களிடம் பீத்திக் கொள்வதில் நான் கொஞ்சம் அதிகப்படி தான்.


  திருப்பு முனை : -

ஒன்பதாவது படிக்கும் போது  ஆங்கிலத்தில் முதல் கால ஆண்டு தேர்வில் நான் வாங்கிய மதிப்பு எண் 13 / 100.

இதைப் பார்த்து என் அப்பா என்னை " மாடு மெய்குமாறு "  திட்டினார். இதுதான் எனக்கு உரமாக மாறியது. தொடர்ந்து வாசித்தேன்.
என் முயற்சி தொடர்ந்தது .

11 வது வகுப்பில் அரசு இறுதி தேர்வில் ஆங்கிலத்தில் என் மதிப்பெண் 11 இருந்து 69 ஆக மாறியது .பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு வந்தவுடன் நாங்கள் விளையாடும் விளையாட்டுக்களில் சில ....

1. கிட்டி  புல் 
2. ஐஸ் பாய் 
3.கபடி 
4:பம்பரம்
5. பட்டம் 
6.சீசனுக்கு ஏற்ப நடுநடுவே கோலிகுண்டு ஆட்டம் வேறு .

இது போதாதைக்கு ஞாயிற்றுக்கிழமையில் கிரிக்கெட் போட்டி நடக்கும் .நான் ஒரு ஆப் ஸ்பின்னர் மற்றும் மிடில் ஆடர்  பேட்ஸ்மேன் . ஸ்கோர் போர்டு கணக்கு இப்போது இல்லை.

பிற்காலத்தில்  நான் 36 வருடம் பணியாற்றிய தனியார் வங்கியில் ஒரு கிரிக்கெட் டீம் உண்டான போது அதில் நான் பங்கு பெற்று சென்னை, ஹைதராபாத் ,பெங்களூர் ,என சென்று வந்தது என்றும் அழியாத கோலங்கள்.

மாலை ஏழு முதல் ஒன்பது வரை டியூஷன்.அங்கு என் எதிர் வீட்டு பீத்தாம் குமாரும் பக்கத்து வீட்டு எட்வினும் நண்பர்கள் ஆனார்கள்.

மதம் பற்றி அப்போதெல்லாம் தெரியாது.உண்மையாக சொல்கிறேன் அப்போது மதம் பற்றிய ஒரு புரிதல் இல்லை;இது ஒரு நல்ல புரிதல் தானே !!

பி யு சி to டிகிரி

நான் வேளச்சேரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பியுசி சேர்ந்தேன். அப்போதுதான் எனக்கு ப்ரமோஷன் கிடைத்தது .அதாவது ஒரு ஹெர்குலஸ் வண்டியை என் அப்பா எனக்கு கல்லூரி போவதற்காக வாங்கி கொடுத்தார்.

தினமும் எனக்கு டிப்ஸ் ரூபாய் இரண்டு.

மேலும் படித்தது பிஎஸ்சி ஜூவாலஜி.சுருக்கமாக சொல்லி முடிக்கிறேன்.எனக்கு நண்பர்கள் அதிகம் எல்லோரிடமும் சகசமாக பேசுவேன் ஆசிரியர்களிடம் அதிக படி பேச மாட்டேன்

இங்க ஒரு உண்மையை சொல்லித்தான் ஆக வேண்டும். நான் படிப்படியாக படித்துக் கொண்டே வருவதால் என் மதிப்பெண்கள் கூடிக் கொண்டே வந்தன. ஆகவே என் ஆசிரியர்கள் என்னை முதல் ஆண்டில் கவனிக்காமல் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கவனிக்கத் தொடங்கினார்கள் ,இந்த கவனிப்பு எனக்கு ஒரு சங்கடமாக இருந்தது தான் உண்மை.


என்ன செய்வது என் இயல்பு அப்படி .
என்னால் மாற்றிக் கொள்ள முடியவில்லை.


ஆனால் காலம் யாரையும் சும்மா வைத்து விடாது .எல்லாவற்றையும் மாற்றிவிடும்.
அவ்வாறாக நான் இன்று எல்லா ஆசிரியரிடமும் பேசிக் கொண்டிருக்கிறேன்.

"நான் பேசுவது " ஒரு மகனிடம் பேசுவது போன்று இருப்பதாக அவர்கள் கூறுவதால் நான் இந்த பழக்கத்தை தொடர்ந்து கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறேன்.

எனக்கும் என் ஆயுளை பல மடங்கு கூட்டிக் கொண்டிருக்கிறது.

உங்களிடமே சொல்லிக் கொள்வதில் எனக்கு என்ன தயக்கம்.

நான் படித்தது குருநானக் காலேஜ் வேளச்சேரி ....

2025-ல் ஒரு  Allumuni Meet நடத்தினார்கள். அதன்மூலம் எனக்கு பல நண்பர்கள் கிடைத்தார்கள்.

அவர்களில் சிலர் யுனைடெட் நேஷன்ஸ் கவுன்சிலின் ரிப்போட்டர்ஸ், இன்டர்நேஷனல் ஆர்பிட்டேஷன் வழக்கறிஞர்கள்,இயக்குனர்கள்,எழுத்தாளர்கள்,பத்திரிகையாளர்கள்,சமூக சேவகர்கள் ....

நண்பர்களே இதெல்லாம் உண்மைதான்.
பொய் சொல்லி எனக்கு என்ன ஆகப் போகிறது.

1981 டு 1983

Msc zoology பூண்டி புஷ்பம் காலேஜ் படிப்பு.


அங்கே எங்களுக்கு கிடைத்த பேராசிரியர்களும், தலைமை பேராசிரியரும் ஒரு சகாப்தத்தை உருவாக்க காரணமாக இருந்தார்கள்.

 In lighter vain :

தஞ்சையில் இருந்து பூண்டிக்கு ரயில் பயணம் மூலம் எங்கள் படிப்பு தொடர்ந்தது.
இதில் ஏக்கம் என்னவென்றால் நாங்கள் படிக்கும் போது எங்கள் கல்லூரியில் கோ எஜுகேஷன் இல்லை.

அப்படி இருந்திருந்தால் பல தலை ராகங்கள் தஞ்சையில் பிறந்திருக்கும்.

எங்கள் வேதனைகளை சாதனைகளாக மாற்றினோம் ...

எங்களுடைய சாதனைகள்....

1. கடல் ஆமைகள் வளர்ப்பு..

2. கடல் அரிப்பை தடுக்க சவுக்கு காடுகள் வளர்த்தல் ...

3. பறவைகளுடைய தந்தை சலீம் அலியுடன் சந்திப்பு

4. இந்தியாவின் பசுமை புரட்சிக்கு வித்திட்ட மாபெரும் விஞ்ஞானி எம் எஸ் சுவாமிநாதன் அவர்களை தாராமணியில் சந்தித்து உரையாடியது ...

இப்போதும் கூட திரு அப்துல் ரகுமான் அவர்கள் (அகவை 86 முடிந்தது) தன் 55 கால ஆராய்ச்சியின் பயனாக ஒரு உப்பை கண்டுபிடித்து இருக்கிறார்.

அந்த "உப்பு" நீரிழிவுக்கு நோய்க்கு ஒரு மாமருந்தாக நிச்சயம் வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இதில் நானும் ஒரு கடுகளவு பங்காற்றி இருக்கிறேன் என்கிற உண்மையை பகிர்வதில் பேர் உவகை கொள்கிறேன்.


புதியதோர் உலகம் படைப்போம்! எல்லோருடைய ஒத்துழைப்புடன் !!

இது ஒரு Raw வான படைப்பு.இங்கே அழகை எதிர்பாக்காதீர்கள்.ஆழமான நட்பு பிறக்கட்டும். சகோதரத்துவம் பிறக்கட்டும்.

நாடு செழிக்க பாடுபடுவோம்.


ராமன். செல்வராஜ்.

https://www.kalkionline.com/author/raman-selvaraj




Comments

Popular posts from this blog

Agriculture is Our Culture

கவிஞர்களே !! உங்கள் கவனத்திற்கு !!!

The Magical Movements