வாழ்க்கை என்பது எவ்வளவு தூரம்?

எவ்வளவு தூரம்;

எவ்வளவு தூரம்;

எவ்வளவு தூரம்,

அளக்க முடியவில்லை;
எல்லை இல்லா வாழ்வு;
எதற்கு இப்படி அலைகிறது;


மனமே பேதம் கொள்ளாதே;
உன் குணம் எனக்கு தெரியும்.


உறவை , நட்பை , பழக்க,
வழக்கத்தை , மாண்பை, மதிப்பை,
மதி இழக்க செய்ய வல்ல,
ஆற்றல் உனக்கு இருக்கிறது.


என்ன செய்ய ?
பாவி மனிதர்கள் நாங்கள் !

படைக்கப்பட்டோம்,
வளர்க்கப்பட்டோம்,
வாழ்வதற்காக வழிகாட்டப்பட்டோம்.

பார்வை எல்லாம் பறக்கின்றன.
நான் மற்றும் ஒன்றை ஆளாய் நிற்கிறேன்.


என்ன செய்ய......
இனி என்ன செய்ய முடியும்...
என்ன செய்ய வேண்டும்...
சொல்- உன்னிடமே கேட்கிறேன்.


பிறப்பு என்பது ஜனனம்.
தெரியாமல் நடக்கிறது.
இறப்பு என்பது மரணம்.
தெரிந்தே நடக்கிறது.

நடப்பதை நிறுத்த முடியாது.
முயற்சிக்கிறோம்; முடிந்த வரை போராடுகிறோம்.

பிரிவும் இயற்கையே !!
வாழ்வும் இயற்கையே!!
இறப்பும் இயற்கையே!!
இதில் ஏங்க என்ன இருக்கிறது ??


சொல்ல எளிதாக இருக்கிறது - நினைத்தால் சுடுகிறது.

எவ்வளவு நாள் இந்த எண்ணங்களை சுமப்பது ?

சுமப்பது சுவை ;
அப்படியானால் எதை சுமப்பது,
எதிர் காலத்தையா ?
நிகழ் காலத்தையா ?
இறந்த காலத்தையா?


சொல் மனமே சொல் .
என் மனசு எனக்கு தெரியவில்லை.
என் இதயம் துடிப்பது எனக்கு உணர்த்துகிறது.


என் துல்லல் தொடர்ந்து இந்த பிரபஞ்சத்தில் இருந்து கொண்டு என்னை ஆட்டி விக்க வேண்டும்.

ஆட்கொள்ள வேண்டும்.

என் " இதயம்" என் "மனதை" ஆட் கொள்ள வேண்டும்.

இறைவா,
இயற்கையே,
எல்லாம் வல்ல பரம்பொருளே,
வழி செய்,
வழி செய்,
வழி செய்....


வழி செய்வாயாக ..........

Comments

Popular posts from this blog

Agriculture is Our Culture

People's Power

Make No Mistakes -Fighting The Destiny