சத்ருஜித் ********* ( கி. ரமணி )
[3/12, 9:23 AM] K. Ramani MIT Guindy: ******** சத்ருஜித் *********
( கி. ரமணி )
சுப்ரதனுக்கு பதிமூன்று வயசு இன்னும் முடியவில்லை.அழகிய பாலகன்.
இடுப்பில் மஞ்சள் வஸ்திரம் கட்டியிருப்பான்.
தோளில் ஒரு உத்ரீயம்.
நெற்றியில் சிவப்பு திலகம்.
கையில் ஒரு சிறிய வில். (அவன் தந்தை அவனுடைய ,பன்னிரெண்டாம் பிறந்தநாளுக்கு அளித்தது.)
இடுப்பில் சில மென்மையான அம்புகள் சொருகி இருப்பான்.
கைகளில் செப்பு கங்கணம்
கழுத்தில் வெள்ளி தாயத்து..
சுப்ரதனின் தகப்பன் தேவதத்தன் ஒரு யானைப்பாகன்..மற்றும் யானைப்படை வீரன்.
சுப்ரதனின் மிகச் சிறந்த நண்பனான பதினெட்டு வயது சத்ருஜித்,ஒரு ஆண் யானை.
தேவதத்தன் வளர்த்த போர் யானை.
உயரம் பத்தடிக்கு மேல்.
எடை நாற்பது பாரத்துக்கு மேல் இருக்கும். (ஒரு பாரம் இன்றைய நூற்றி பத்து கிலோக்கு மேல் )
தோல், கரும் சாம்பல் நிறம்.
ஆழமான சிறிய கண்கள்,
போர் வாள்கள் போல் வளைந்து நீண்ட தந்தங்கள்,
நுனியில் பளபளக்கும் இரும்புப் பூண்.
நெற்றியில் குங்குமம்.
கழுத்து நிறைய வெண்கல மணிகள் சேர்ந்த மாலை.
பெரிய காதுகளை சத்ருஜித் வேகமாய் அசைக்கும் போது,அருகே சிறியதாக ஒரு புயலே உண்டாகும் என்று சுப்ரதன் சொல்வான்.
பாஞ்சால மன்னனும் திரௌபதியின் தகப்பனும் ஆன துருபதனின் யானைப்படையில் இருந்தான் தேவதத்தன்.
அவனுடைய பயிற்சிக்கு உட்பட்டு பல யானைகள் இருந்தாலும் அவன் வளர்த்த யானை சத்ருஜித் தான்.
மூன்று வயதிலிருந்து சத்ருஜித் தேவதத்தனிடம் தான் வளர்ந்தது.
பல்லாயிரக்கணக்கில் யானைகள் படையில் இருக்கையில் அரசு தேர்ந்த பாகன்களின் பொறுப்பில் சில யானைகளை விடுவதுண்டு.
தேவதத்தன் சுப்ரதனிடம் அடிக்கடி சொல்லுவான்.
" சத்ருஜித் தான் உன்னுடைய அண்ணன்" என்று.
சுப்ரதன் சத்ருஜித்துடன் வளர்ந்தான்.
வெளியே எங்கு சென்றாலும் சத்ருஜித் தன் நீண்ட தும்பிக்கையால் சுப்ரதனை அணைத்துத் தூக்கித் தன் முதுகு மீது அனாயாசமாக அமர்த்திக்கொண்டு விடும். கீழே இறக்கும் போதும் அப்படியே.
சத்ருஜித்துக்கு கரும்பு ரொம்ப பிடிக்கும்.
தங்கள் வீட்டுக்குப் பின்பக்கம் இருக்கும் கரும்பு வயலுக்கு சுப்ரதன் யாரும் பார்க்காத போது, சத்ருஜித்தை நுழையச் சொல்லி கரும்புகளைப் பிடுங்கி உண்ண விட்டு விடுவான்.
அகமகிழ்ந்து போன சத்ருஜித் நன்றிக் கடனாக சந்தையில் இருக்கும் அப்பக்கடையிலிருந்து சில அப்பங்களை தும்பிக்கையால் அள்ளி சுப்ரதனிடம் கொடுக்கும்.
ஊரில் இருக்கும் மற்ற பிள்ளைகளுக்கு சுப்ரதனிடம் பயம் கலந்த மரியாதை உண்டு .காரணம் அவனுடைய
மெய்க்காவலன் சத்ருஜித் தான்.
குரு ஷேத்திரத்தில் போர் சீக்கிரம் ஆரம்பமாகும் என்று நேற்று
அப்பா தேவதத்தன் அம்மா தாராவிடம் சொல்லுவதைக் கவலையுடன் கேட்டுக் கொண்டிருந்தான் சுப்ரதன்.
"அப்பா! அப்போ நீ போய் சண்டை போடுவாயா?."
"ஆமாம் சுப்ரதா. போர் நடக்கும் போது வீரன் வேற என்ன செய்வான்?"
" ரொம்ப நாள் நடக்குமோ போர்?என்று கேட்டாள் அம்மா தாரா.
" ஆமாம் இது மிகப்பெரிய போராக இருக்க போகிறது.
பதினெட்டு அக்ஷௌகிணி படைகள் சண்டை போடப்போகின்றன.
ஒரு அக்ஷௌகிணிஎன்றால் 21870 ரதங்கள், 21870யானைகள், 65610 குதிரைகள் 109350 போர் வீரர்கள் கொண்ட படை என்று பொருள்.
நம் பாண்டவர் பக்கம், ஏழு அக்ஷௌகிணி, துரியோதானாதிகள் பக்கம் பதினோன்று. மொத்தத்தில் பல லட்சக்கணக்கில் ரதம் யானை, புரவி காலாட்ப்படைகள் கொண்ட சமுத்திரம். எல்லா மகாரதர்களும் பங்கேற்க போகிறார்கள்.
அதனால் போர் எவ்வளவு நாள் நடக்கும் என்று யாராலும் கூற முடியாது. ஒரு வாரம் ஆகலாம் மாதமாகலாம் வருஷமும் ஆகலாம்."
போர் நடக்கும் குருஷேத்திரத்துக்கு பக்கத்தில் நம் ஞான கூடம் கிராமத்தில் பூர்வீக வீட்டில் நாம் முதலில் போய் இருப்போம். அங்கிருந்து நான் போர்க்கு சென்று விடுவேன்.நீங்கள் போர் முடியும் வரை அங்கு இருங்கள்.
"அப்பா! போருக்கு சென்றால் எப்பொழுது திரும்பி வீட்டுக்கு வருவாய்?"
சிரித்தான் தேவதத்தன்
"போர் முடிந்த பின் தான். நடுவில் வரமாட்டேன்.போர்க்கு நடுவில் என்னைப் பற்றி ஏதாவது உங்களுக்கு செய்தி வந்தால் அது என் வீர மரணம் பற்றி தான் இருக்கும்."
மீண்டும் சப்தமிட்டு சிரித்தான் தேவதத்தன்.
அம்மா "இது என்ன பேச்சு " என்று தேவதத்தனின் வாயை மூடினாள்.
* * *
தேவதத்தன் அடுத்த நாள் இரண்டு குதிரை பூட்டிய ஒரு ரதத்தில் சில முக்கியமான வீட்டுக்கு தேவையான உபகரணங்களுடனும் மனைவியுடனும் ஞான கூடம் கிளம்பினான்.
சுப்ரதனை தன் கழுத்தில் உட்கார வைத்துக் கொண்டு சத்ருஜித் உற்சாகமாக ரதத்தின் வேகத்துக்கு இணையாக நடந்தது.
வழியில் ஒரு பெரிய கரும்பு வயல்.
சுப்ரதன் சத்ருஜித்தைத் தட்டிக் கொடுத்து கரும்பு வயலை நோக்கி செலுத்தினான்.
பக்கத்தில் ரத்தத்திலிருந்து தேவதத்தன்
" என்ன செய்கிறாய் சுப்ரதா?. கரும்பு வயலுக்கு போனால் சத்ருஜித் எளிதில் திரும்பி வரமாட்டான் . நமக்கு நேரம் ஆகிறது. திரும்பி வா "என்றான்.
" சத்ருஜித் தனக்கு வேண்டிய அளவுக்கு
கரும்புத் தின்றவுடன் திரும்பி வந்து விடுவான் அப்பா. இந்த சமயத்தில் நீங்களும் குதிரைகளுக்கு தீவனம் வையுங்கள். .நீண்ட பயணம் அல்லவா. இந்த பிராணிகள் தானே நம்மை சுமக்கின்றன. அவைகளுக்கு பிடித்தமான உணவை உண்ணட்டுமே. "
தேவதத்தான் பதிலே சொல்லாமல் பணிந்தான்.
ஞான கூடத்தில் நண்பன் வீட்டில் மனைவியையும் சுப்ரதனையும் விட்டு விட்டு சத்ருஜித்தின் மீது ஏறிக் கிளம்பினான் தேவதத்தன்.
" நான் அருகில் இருக்கும் என் பாஞ்சால மன்னர் துருபதனின் பாசறைக்கு, போர் பயிற்சி கூடத்திற்கு போகிறேன். ஒரு வாரத்தில் குரு ஷேத்திரத்தில் பாண்டவ துரியோதனாதிகளின் போர் ஆரமிக்கப் போகிறது.
எனது வேலை யானை மீது அமர்ந்து யானையைச் செலுத்துவது தான். எனக்கு பின்னே அம்பாரியில் மாவீரர் ஒருவர், அமர்ந்து போர் புரிவார். நானும் யானையும் அவரது கருவிகள் மற்றும் காப்பாளர்கள்.அவ்வளவுதான்.அந்த மாவீரனைக் காக்கும் பணியில் நானோ, சத்ருஜித்தோ இறக்க நேரிடலாம். ஆனால் இதுதான் எங்கள் கடமை."
"உங்களுக்கோ சத்ருஜித்துக்கோ ஒன்றும் ஆகாதபடி நாங்கள் கடவுளை வேண்டுகிறோம் "என்றாள் அம்மா.
இந்த சண்டை நடக்காமல் இருந்தால் லட்சக்கணக்கில் மனிதர்கள் குதிரை யானைகள் எதுவும் இறக்க வேண்டிய அவசியம் இல்லைஅல்லவா. இதெல்லாம் அவசியமா? இதெல்லாம் யாருக்காக?" என்றான் சுப்ரதன்.
சிரித்தான் தேவதத்தன்.
"போர் நடப்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். பாண்டவரா? கவுரவரா?யார் சரி?எது தர்மம்?என்பது பற்றி என் போன்ற வீரர்களுக்கு கவலை இல்லை.
அது எங்கள் வேலையும் இல்லை. போரில் சண்டை போடுவது எங்கள் கடமை. தர்மம் அல்லது வேலை.என் மன்னன் துருபதன், இளவரசன் திருஷ்டதியும்னன்
இவர்கள் சொல்படி நடப்பது என் வேலை. அதனால் பாண்டவர் பக்கம் இருந்து போர் செய்வேன்.மற்றது விதிப்படி நடக்கும். "
அப்பா உங்களுக்கும் சத்ரு ஜித்துக்கும் வெற்றி நிச்சயம். சத்ருஜித்துக்கு பசி அதிகம்பா. பட்டினியோடு அவனை போருக்கு கொண்டு செல்லாதீர்கள்.
அவனுக்கு கோபம் வந்தால் தாங்காது ! ஜாக்ரதை !" சப்தமாக சிரித்தான் சுப்ரதன்.
" அட,எனக்கு தெரியும்பா, நான் வளர்த்த யானையை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று..." என்று கூறிவிட்டு சுப்ரதன் கன்னத்தை கிள்ளிவிட்டு
"நான் செல்கிறேன். பாஞ்சாலம் வெல்க."
என்று கம்பீரமாக யானை மீது சென்றான் தேவதத்தன்.
ஒரு வழியாக மகாபாரத யுத்தமும் ஆரம்பித்துவிட்டது குருஷேத்திரத்தில்.
* * *
இரண்டு எதிரி படைகளும் லட்சக்கணக்கில்,அவரவர்களுக்கான பாசறையில்வந்து தங்கினார். உணவகம், பயிற்சி மைதானம், மருத்துவக்கூடம்
போர் யானைக்கூடம்,குதிரைகள் லாயம்,சற்று தள்ளி பாலுக்கான பசுக்கள், அசைவ, சைவ உணவுக்கு வேண்டிய மிருக்ங்கள்,பறவைகள், காய்கறி, தானியங்கள் என்று எல்லாம் ஆங்காங்கே தயாராக இருந்தன.
தவிர சமையல் வல்லுநர்கள், மருத்துவர்கள்,
மற்ற மர,இரும்பு, கட்டிடக் கலை வல்லுநர்கள், சிறு வியாபாரிகள்,கடைகள் என்று இந்த இடமே கிட்டத்தட்ட ஒரு சிறிய நகரம் போல் காட்சி அளித்தது.
குருஷேத்திரப் போர் சரஸ்வதி நதிக்கரையில் நடந்தது என்று சொல்லப்படுகிறது.
அந்தக்காலத்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் சரஸ்வதி மிகப் பெரிய நதியாக பூமி மேல் ஓடியது என்று மஹாபாரதம் கூறுகிறது. சரஸ்வதி தற்போது பூமிக்கு அடியில் செல்வதாகக் கருதப்படுகிறது.
வீரர்களின் உணவு க்கு தேவைப்பட்ட தண்ணீர் எல்லாம் சரஸ்வதி மற்றும் அருகிலேயே உள்ள ஹிரண்யவதி நதியில் இருந்து யானைகள் குதிரைகள் மூலம் கொண்டுவரப்பட்டது.
முதல் நாள் யுத்தம் கண்ணன் அர்ஜுனனுக்கு சொன்ன பகவத் கீதையுடன் இனிதே ஆரம்பித்தது.
அடுத்த ஆறு நாட்களில் பீஷமர் புயல் போல் சண்டை போட,
பீமன் சில கவுரவ சகோதரர்களை கொல்ல,
பின் துரியோதனனுடன மோத
அர்ஜுனன் பீஷமருடன் மோத,
ஒரு சமயத்தில் பொறுமை இழந்த பரந்தாமன் கையில் சக்கரத்துடன் பீஷ்மரை கொல்ல இறங்கி சக்ரபாணி ஆகி அப்புறம் பின்வாங்கி,தன் ரதத்தில் ஏறி மறுபடி பார்த்த சாரதி ஆக
இப்படி எல்லாம் நடந்தது.
முதல் ஒரு வாரத்தில் பாண்டவர் பக்கத்தில் விராட மன்னனின் இரு மகன்கள் இறந்தனர். துரியோதனனின் எட்டு தம்பிகள் இறந்தனர்.
நிறைய அலுத்துப்போகும் அளவு போர்,ரத்தம், ரணம்.. எங்கு பார்த்தாலும்.
ஏராளமான குதிரைகள், யானைகள் மற்றும் போர் வீரர்களின் உயிரிழப்பு.
ஆனாலும் போர் இன்னும் முக்கிய நிலையைக் கூட எட்டவில்லை.
இன்னும் எவ்வளவு நாளோ!. யாருக்கும் புரியவில்லை.
* * * *
ஞான கூடத்தில் சுப்ரதனின் அம்மா தாரா தினமும் அழுது கொண்டிருந்தாள். சுப்ரதன் கேட்டால் "ஒன்றும் இல்லை" என்று கண் துடைத்துச் சிரிப்பாள்.
" போர் ஆரம்பித்து ஒரு வாரம் ஆகிவிட்டது.
போர் பூமியில் இருந்து எந்த செய்தியும் இல்லை. இது நல்லதாகவும் இருக்கலாம்.. ஆனால் அம்மாவைப் பார்த்தால் பாவமா இருக்கு.
அம்மாவுக்காகவாவது இன்று கிளம்பி போர் முடிந்த சாயுங்கால வேளையில் குரு ஷேத்ரம்சென்று அப்பாவைப் பார்த்து விட்டு.. அது முடியவிட்டால் குறைந்த பட்சம் அவருடைய நலம் விசாரித்து விட்டு வரணும்.
முடிந்தால் சத்ருஜித்தையும் பார்க்கலாம். அவனைப் பார்த்து ஒரு வாரம் ஆச்சு. "
சுப்ரதன் அம்மாவிடம் கூட சொல்லாமல்
.கிளம்பிவிட்டான்.
* * *
ஞான கூடத்திலிருந்து போர் பூமி ஒரு யோஜனை தூரம் தான் ( 12 கீமீ )இருக்கும்.
நட க்க பத்து நாழிகை ( 4 மணி ) ஆகும்.
உச்சிக்கு மேல் கிளம்பி நடக்க ஆர்ம்பித்தான்.
பாதி வழி கடந்த போது அருகில் கரும்பு வயல் இருப்பதைப் பார்த்த உடன்
வயலுக்குள் இறங்கினான்.
சத்ரு ஜீத்துக்கு கரும்பு ரொம்ப பிடிக்குமே . யுத்தபூமியில் பாவம் யார் அவனுக்கு மெனக்கிட்டு கரும்பு கொடுப்பார்கள்?
போர் சமயத்தில்.அரிசி, சோளம்,மூங்கில் வாழை,இலை தழை,,இவை தான் எளிதில் நிறைய கிடைக்கும்.
இரண்டு முழுக் கரும்புகளை கத்தியால் வெட்டி தூண்டுகளாக்கி தன் மேல்
துண்டில் வைத்து முதுகில் கட்டிக் கொண்டான்.
அவன் குருஷேத்திரம் செல்வதற்கு முன் சூரியன் மறைந்து விட்டது.
போர் முடிந்து உயிருடன் மீண்ட பல்லாயிரக்கணக்கான வீரர்களும் ரதங்கள்,யானைகள் குதிரைகளுடன் திரும்பிப் பாசறை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
இது பாண்டவர் அணி போலும் .. தேவதத்தனின் நெருங்கிய நண்பனான படை வீரன் சூரசேனன் சுப்ரதனை அங்கு பார்த்து ஆச்சரியப்பட்டான்.
"குழந்தை, நீ எங்கே வந்தாய்?"
என் அப்பாவையும் என் யானை சத்ரு
ஜித்தயும் காண்பதற்கு தான் ஐயா."
சூரசேனன் ஒரு நிமிடம் ஒன்றும் சொல்லாமல் நின்றான்.
பின்
" சுப்ரதா! ஒரு விஷயம் கூறுவேன் நிதானமாக கேட்டுக் கொள். ரொம்பவும் கவலை கொள்ளும்படி விஷயமாக இருக்காது.
இன்று மதியம் கௌரவ சேனையின் பலர் சேர்ந்து உன் தந்தை பாகனாக இருந்த யானயையும் மேல் இருக்கும் வீரர்களையும் தாக்கும் போது மிகுந்த காயமுற்ற யானை துளியும் பதட்ட ப்பாடாமல் தேவதத்தனையும் அம்பாரியில் அமந்திருந்த மாவீரன் ஜெயசீலனையும் தாக்குதல் பகுதியிலிருந்து வெளியேற்றி இறக்கி விட்டு, பின் கீழே விழுந்து விட்டது.
ஜெயசீலனுக்கு காயம் எதுவும் இல்லை.
தேவதத்தனுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன . ஆனால் உயிருக்கு அபாயம் இல்லை. தேவதத்தனால் குறைந்தது இன்னும் பத்து நாட்களுக்கு
போர் பூமிக்கு வர முடியாது. ஒரு வகையில் பார்த்தால் இது உனக்கும் உன் அன்னைக்கும் நல்ல செய்தி தான்.
ஆனால் உங்க யானை...சத்ருஜித் தானே அதன் பெயர்?...பாவம்.
தன் எஜமானர்கள் உயிரை காப்பாத்திவிட்டு கீழே விழுந்து விட்டது. அது பிழைக்க வழியில்லை..இந்நேரம் அது இறந்திருக்கலாம் .
"சத்ரு ஜித் எங்க விழுந்துது?"
சூர சேனன் யானை விழுந்த இடத்தை தூரத்திலிருந்து காட்டினான்.
பின் "சுப்ரதா. நீ தந்தையை காண முடியாது அவர் உடல் நலம் பெற்ற பின் சொல்லி அனுப்புகிறேன். கவலை வேண்டாம். நீ இங்கு வந்ததை உன் தந்தையிடம் சொல்ல மாட்டேன். நீ உடனே வீட்டுக்கு போ.ஜாக்ரதை ." என்றான்.
"சரி " என்ற சுப்ரதன் சூரசேனன் தலை மறைந்ததும் சத்ருஜித் விழுந்த இடம் நோக்கி சென்று தேட ஆரம்பித்தான்.
யுத்த பூமி, ரண பூமியாக இருந்தது.
போகும் இடமெல்லாம் மனித, மிருக உடல்கள் உறுப்புகள். உடைந்த தேர் பாகங்கள், எய்த அம்புகள், ஏறிந்த ஈட்டிகள், உடைந்த வாட்கள்,கொடிகள் ...
இத்தகைய மாபெரும் போர்களில் ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கண க்கான வீரர்கள் மடியும் போது ஒரு சில முக்கியமானவர்களை மட்டுமே மற்ற வீரர்கள் கண்டு பிடிக்க முடியும்.சாதாரண வீரர்களை எல்லாம் மரணித்த பின் அடையாளம் கண்டுபிடிப்பது என்பது முடியவே முடியாத விஷயம்.
மறுநாள் காலையில்
போர் மீண்டும் துவங்க வேண்டும் என்பதால் முந்திய இரவில் போர் பூமியில் எல்லா உடல்களும் அகற்றப்பட நேரம் பற்றாமையால் உடல்கள் ஆங்காங்கே குவிக்கப்பட்டு ஏரியூட்டப்படும்.
இது, இறந்த,அடையாளம் தெரியாத, வீரர்களுக்கும், குதிரைகளுக்கும் யானைகளுக்கும் பொருந்தும்.உடைந்த மரத்தேர்களும் வெட்டப்பட்ட மரங்களும்
எரியூட்ட உதவும்.
ஆயிரக்கானக்கான பணியாளர்கள் இரு பக்கத்திலிருந்தும் இந்த துப்புரவு தொழிலில் ஈடுபட்டாக வேண்டும்.
இல்லாவிட்டால் அடுத்த நாள் வீரர்கள்
போரிடுவது கடினம்.
யுத்தத்துக்கும் கூட சுத்தம் வேண்டியிருந்தது!
குரு ஷேத்திரம் பெரிய பூமியா இருந்த தால் கூட சுத்தம் சுகதாரம் இரண்டும் அதற்கு தேவைப்பட்டது. என்று நமக்கு புரிகிறது.
யானைகளின் முதுகில் கட்டப்பட்டசங்கிலிகளில் பிணைக்கப்பட்ட உடைந்த ரதம் போன்ற பெரிய பொருட்க ளும் இழுத்துச் செல்லப்பட்டு
எரியூட்டப்படும்..
கடைசியில் ரணபூமி முழுவதும் கிருமி நாசினியாக மஞ்சள் நீர் தெளிக்கப்பட்டு மறுநாளின் புதுச் சண்டைக்கு யுத்த பூமி ஜம் என்று மங்களகரமாகத் தயார் ஆகிவிடும்.
சுப்பிரதனுக்கு அங்கு நடப்பவை கொஞ்ச நேரத்தில் புரிய ஆரம்பித்து விட்டது.
"நல்ல வேளை. தந்தை கொஞ்சம் அடி பட்டு இருந்தாலும் உயிருக்கு ஆபத்தான நிலை இல்லை என்று அவர் நண்பர் சொல்லியிருக்கிறார். இது நல்ல சேதி.
அடுத்த பத்து நாட்களுக்கு போரிட வேண்டாம் என்பதும் நல்ல செய்தி.
ஆனால் அம்மாவிடம் சொல்லும் போது அப்பாவுக்கு அடிபட்ட விஷயத்தை மட்டும் மறைத்து விடலாம்.
"உயிருடன் இருக்கும் வீரனின் கதியே
இப்படி.! இறப்புக்குப் பின் வீரர்களை அடையாளம் கண்டு பிடிக்கும் நேரம் கூட யாருக்கும் இல்லை, எனும் போது என் யானை சத்ருஜித்தை எப்படி கண்டு பிடிப்பேன். ஒருவேளை கண்டுபிடித்தாலும் என்னால் யானையை பிழைக்க வைக்க முடியுமா?"
என்று எண்ணினான்.
நிதானமாக போர் பூமியில் நகர்ந்து கீழே விழுந்திருந்த யானைகளை எல்லாம்
மிக அருகில் சென்று பார்த்தான்.
சத்ருஜித்தை எளிதில்அடையாளம் காட்டும் விஷயங்கள் இரண்டு உண்டு.
அதனுடைய இரண்டு தந்தங்களில் ஒன்று மிக வளைந்தும் ரொம்ப நீளமாகவும் மற்றொன்று ஓரளவுக்கு நேராகவும் கொஞ்சம் குட்டையாகவும் இருக்கும்.
மற்றொரு முக்கியமான அடையாளம்
சத்ருஜித் நெற்றியில் இரு கண்களுக்கு மத்தியில் நீளவாக்காக வெளிர் மஞ்சள் நிறத்தில் பெரிய தேமல் ஒன்று இருக்கும்.
இரண்டு நாழிகை நேரத்துக்கு மேலாகத் தேடிய பின் போர் வீரர்களின் தீவட்டி வெளிச்சத்தில் சத்ருஜித் கிடைத்தான்.
பூகம்பத்தால் சரிந்த மலை போல் கிடந்தது சத்ருஜித். உடலில் அசைவு இல்லை. கழுத்து கால்கள் போன்ற இடங்களில் சில அம்புகள்
தைத்திருந்தன.
சத்ருஜித்தை சுப்ரதனால் பார்க்க முடியவில்லை. கண்களில் நீர் திரண்டது.
" சத்ருஜித் இறந்து போய்விட்டதா? இல்லை என்றாலும் இந்த நிலையிலிருந்து எப்படி உயிர் பிழைக்க வைக்க நம்மால் முடியும்?
இறந்துவிட்டது என்பது நிச்சயமாகிவிட்டால் போர் வீரர்களின் துணையுடன் எரியூட்ட வேண்டியது தான்."
சுப்ரதனுக்கு அதற்கு மேல் எதுவும்
எண்ணவே முடியவில்லை.
"சத்ருஜித்.. சத்ருஜித் "என்று தன்னால் முடிந்த அளவுக்கு சப்தமிட்டு அழைத்துப் பார்த்தான் சுப்ரதன்.
சத்ருஜித்த்தின் உடலில் அசைவில்லை.
கொஞ்ச நேரம் கண் கலங்கி நின்ற சுப்ரதன், பின்னர் தன் முதுகில் சுமந்து வந்த கரும்புத் துண்டங்களை
துண்டிலிருந்து எடுத்து, தன் கடைசிக் காணிக்கையாக சத்ருஜித் முன் வைத்து வணங்கினான்.
* * *
அடுத்த பதினோரு நாட்களில் போர் முடிந்து விட்டது.
பாண்டவர்கள் வெற்றி பெற்று விட்டார்கள்.
எவ்வளவு பெரிய வெற்றி பெற்றால் என்ன? அவர்கள் தரப்பிலும் மரணங்கள் இழப்புகள் இருந்தன .. அதுவும் போர் முடியும் சமயத்தில் ஏராளமான இழப்புகள்.
கொண்டாட்டம் என்று ஒன்றுமில்லை. போர் முடிவு என்பது ஒரு கடமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதற்கான காரியங்கள் நடந்தன.
வெள்ளம் புகுந்து பின் மீண்ட பகுதியில் தேங்கும் குட்டை போல் பாரதப் போர் முடிந்து ஆங்காங்கே மீதி இருந்தது சொற்பப் போர் வீரர்கள், படைகள்.!
.
சிலர் தூரத்தில் இருந்த அவரவர்கள் நாட்டை நோக்கித் திரும்பிச் செல்லவும் ஆரம்பித்தனர்.
மேலும் ஒரு சில தினங்கள் கழிய,தேவதத்தன் உடல் போதிய அளவு நலமாக, ஞான கூடம் செல்வதற்கு ஒரு குதிரையில் கிளம்பினான்.
அவனும் அந்த குதிரையுமே அதிருஷ்ட சாலிகள்தான் என்று அவன் நினைத்தான்… . இவ்வளவு மரணங்களைத் தாண்டிப் பிழைக்க இவர்களுக்கு விதி வழி செய்திருக்கிறதே!
"நம் மன்னர் துருபதனும் இளவரசன் த்ரிஷ்டத்யும்னனுமே இறந்துவிட்டார்களே போரில் !
தாராவையும் சுப்ரதனயும் பார்க்கப்போகிறோம். இனிமேல் போர் என்ற ஒன்று உலகில் நடக்காது.
நடப்பதாக இருந்தாலும் சண்டை போட வீரர்கள் வேண்டாமா உலகத்தில் ?
எவ்வளவு வீரர்கள் இறந்தனர்?எவ்வளவு குதிரைகள் யானைகள் மறைந்தன?. பாவம் நம் சத்ருஜித்.! இன்று நான் உயிருடன் இருக்கக் காரணமே சத்ருஜித் தானே!. சத்ருஜித் என்னைக் காப்பாற்றி விட்டுப் பின் இறந்துவிட்டதாக எல்லாரும் சொன்னார்கள். அதன் ஆன்மா மற்ற இறந்த லட்சக்கணக்கான யானைகளின்
ஆன்மாவுடன் சேர்ந்து நற்கதி அடையட்டும் "
இவ்வாறு எண்ணியபடியே கண் கலங்கியபடி தேவதத்தன் ஞான கூடம் அடைந்தான்.
அங்கே மக்கள் சிறு குழுவாக அவனை எதிர்பார்த்து வரவேற்கக் குழுமி இருந்தனர்.
நடு நாயகமாக ஒரு யானை மீது சுப்ரதன்.அமந்திருந்தான்.
யானையா? ..ஆம்!!சத்ருஜித்தே தான்.!!
"இது எப்படி நடக்கும்! சத்ருஜித் உயிரோடு எப்படி இருக்கிறான்? " தேவதத்தன் தழதழத்தான்.
சுப்ரதன் சப்தமாய் சொன்னான்.
"அப்பா! அடிபட்ட உங்களைக் காப்பாற்றி விட்டு சத்ருஜித் மயங்கி விழுந்து விட்டான்.
அன்று அங்கு உங்களைப் பார்க்க வந்த நான் நீங்கள் காயமுற்றது முதல் எல்லா விவரமும் அறிந்தபின் கீழே விழுந்து விட்ட சத்ருஜித்தைத் தேடிக் கண்டு பிடித்தேன் .
இறந்து போய்விட்டான் என்று நிச்சயம் செய்து நான் அவனுக்கு கொண்டு வந்திருந்த கரும்பைக் காணிக்கையாக அவன் முகத்தின் அருகில் வைத்தேன்.
கரும்பு வாசனையில் சற்று நேரத்தில் மெதுவாக மயக்கம் தெளிந்த சத்ருஜீத் உற்சாகமாக கரும்பைத் தின்றுவிட்டு ஒன்றுமே நடக்காதது போல் எழுந்து மெதுவாக நடக்க ஆரம்பித்து விட்டான்.
நான், சத்ருஜித்தால் வேகமாக நடக்க முடியவிட்டாலும் பரவாயில்லை. இந்த இடத்தை விட்டு முதலில் அவன் அகலவேண்டும் என்று அவனைக்கூட்டிக்கொண்டு ஞான கூடத்துக்கு, நம் வீட்டுக்கே வந்துவிட்டேன்.
பின் செய்த மருத்துவத்தில் உடல் சரியாகிவிட்டான்.
அவன் செய்த பெரும் போரும்,நமக்கு செய்த உதவியும் நம்முடைய இந்த ஜென்மத்துக்கும் இந்த நாட்டுக்கும் தாராளமாகப் போதும் அப்பா!
. நீங்கள்,சத்ருஜித், அம்மா,நான் எல்லாரும் இனிமேல் நிம்மதியா வாழலாம் அப்பா."
சுப்ரதன் முடிக்க சத்ருஜித் தன் தும்பிக்கையால் சுப்ரதனை கீழே இறக்க, தேவதத்தன் ஓடி வந்து தன் இரு பிள்ளைகளயும் ஒன்று சேர
அணைத்துக்கொண்டான்.
* * * * *
[3/12, 10:33 AM] youtube.com/@selvasil1961: முழுவதுமாக படித்து முடித்து விட்டேன்.
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று.
அப்பப்பா !
எவ்வளது செய்திகள்...
மேலும் தமிழின் பல அளவுகளை அளக்க பயன் பாட்டு சொற்கள்
1. பாரம் = 1100 kg
2. அதெஷளகிணி: 21870 ரதங்கள்
3. யோஜனை தூரம் = 12 கி.மீ
4. 10நாழிகை = 4 மணி
இப்படி பல செய்திகள்.
From ancient times we were pioneers in time management with invention of numbers and algorithms...
ரமணி சார், பாரதப் போர் ஒரு சிறிய விளக்கம் மூலம் நம் பண்பாட்டில் "பிறப்பிற்கும் எல்லா உயிர்க்கும் " என்கிற கோட்பாட்டை முன் மொழிந்து யானையின் விஷ்வாசத்தை பறை சாற்றி நம் இந்திய பண்பாட்டின் "war and peace" ஐ ஒரு பகடியோடும் பகட்டோடும் சொல்லி "pride and prejudice" costs every thing including the human values to dustbin என்று விளக்கி இருப்பது இன்று நடை முறை எதார்த்தமாகவும் இருக்கிறது.
A philosophical outlook...
"Just being there " என்று இந்த போரில் கடமை ஆற்றி உலகத்திற்கு war times. Orderliness ஐ கொண்டு வந்ததும் நம் பாரத போர் என்று நான் நினைக்கிறேன்.
A synopsis of my views .
Selvaraj..
Comments
Post a Comment