என் அன்பு கல்கி வாசகர்களே !!
என் அன்பு கல்கி வாசகர்களே !! வணக்கம், வரலாறு அறிவோம் !!! கொஞ்சம் வரலாறு ! கொஞ்சம் படிப்பு !! நமக்கெல்லாம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திய காரண கர்த்தா யார் என்றால் (1980 க்கு முன்) உடனே நம் நெஞ்சை ஆட்கொள்ளும் ஒரு தெய்வம் கல்கி அவர்கள் . அவர் வாழ்ந்த மணல்மேடு கிராமத்தை நான் சென்று பார்த்து இருக்கிறேன். நான் குழந்தையில் வசிப்பதால், இந்த செய்தியை உங்களுக்கு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். மாதத்திற்கு ஒரு முறை கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வு சங்கம் மூலம் என் நண்பர் திரு கோபிநாத் (63 81 78 60 37 ) அவர்கள் தஞ்சையில் இருந்து புறப்பட்டு கடலூர் வரை ஒரு வரலாற்று சுற்றுலா நடத்தி ராஜராஜன் புகழை பரப்பி தமிழர்கள் வாழ்வில் அறத்தையும், பெருமையையும் பறைசாற்றி நம் பண்பாடுகளை காத்து சிறம்பட பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இதன் மூலம் பல்லாயிரம் சுற்றுலாப் பயணிகள் தங்கள் வாழ்வியல் பயனை பயணம் மூலம் அனுபவித்து "பொன்னின் செல்வன் " படைத்த "கல்கியாரையும் ", ஆயிரம் அகவை கண்ட "ராஜராஜனின் " பெருமையையும், "ராஜேந்திர சோழனின் " வரலாற்று உண்மையையும் , தமிழ்நாட்டிற்கும் உலகிற்கும் ...