விஞ்ஞானி சத்யேந்திரநாத் போஸ்
கடவுளின்துகள் என்ப்படும் மூல துகள்களை கண்டறிந்த இந்திய விஞ்ஞானி சத்யேந்திரநாத் போஸ் அவர்களின் 131வது பிறந்தநாள் இன்று ❤️🇮🇳🙏 பிரம்மாண்டம் அணுக்களால் ஆனது என்று அறிந்த அறிவியல், அணுவுக்குள்ளும் ஒரு பிரம்மாண்டம் இருந்ததை அறிந்து மலைத்தது. அணுவிலும் சிறியதாய் ஏராளமான நுண்ணணுக்கள் இருப்பது பரிசோதனைகள் மூலம் நிரூபணம் ஆகியது. இந்த நுண்ணணுப் பட்டாளம் மொத்தத்தையும் இரண்டு வகைத் துகள்களுக்குள் அடக்கி வரையறை செய்தனர் குவாண்டம் இயந்திரவியல் விஞ்ஞானிகள்.. புரோட்டான், நியூட்ரான், எலெக்ட்ரான் மற்றும் அவையொத்த நிறை(mass) உள்ள துகள்கள் அனைத்தும் ஃபெர்மியான்களாக(Fermions) வரையறை செய்யப்பட்டன. நிறை அற்ற துகள்களுக்கு போஸான்கள் (bosons) என்று பெயரிடப்பட்டது. இதில் சுவாரஸ்யமான செய்தி என்னவென்றால் நிறை உள்ள ஃபெர்மியான் துகள்கள் தங்களது நிறையை நிறையற்ற போஸான் துகள்களிடம் இருந்தே பெற்றுக் கொண்டன! இந்த விசித்திர போசான்களுக்கு எப்படி அந்தப் பெயர் வந்தது என்பது இன்னொரு சுவாரஸ்யமான கதை. சத்யேந்திரநாத் போஸ் என்னும் இந்திய விஞ்ஞானி வங்காளத்தைச் சேர்ந்தவர். ஜகதீஸ் சந்திர போசின் பிரதான மாணவரான இவர்,1920...