Posts

Showing posts from July, 2024

மனிதனின் மன நிலைகள் .....

மனிதனின் மன நிலைகள் :- இதை 5 வகைகளாக பிரிக்கலாம். 1) விழிப்புணர்வு நிலை ,(consciousness) 2) விழிப்பு உணர்வற்ற நிலை,( sub consciousness) 3) விருப்ப நிலை (free will) 4) கூட்டு விழிப்புணர்வு,(collective consciousness) 5) அதி சக்தி விழிப்புணர்வு(super consciousness) இப்போது மனசுக்கு வருவோம்; நாம் நம் விருப்பத்தை (free will)அடைவதற்கு எந்த ஒரு விதியோ அல்லது காலமோ அல்லது வெளியோ (time and space) குறிக்கிடுவது இல்லை. காரணம் நம் சுய விருப்பம் நம் மனதில் பதியும் போது நம்முடைய உடலானது ஆற்றல் பெற்று செயலைச் செய்ய தூண்டுகிறது. இந்த தூண்டுதல் மனதில் நிகழ்கிறது. ஆக மனம் தன் விருப்பத்தை அடைய "விழிப்பு நிலையை"  பயன் படுத்திக் கொள்கிறது. இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. அதாவது நம் "விருப்பம்"  நம்மை சார்ந்து இருந்தால் அது எந்த ஒரு பின் விளைவையும் ஏற்படுத்தப் போவது இல்லை. இது சுய முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்லும். உதாரணம் : " புத்தகம் வாசித்தல்" - இது ஒருவரின் கற்பனைத் திறனை அதிகரித்து அவனுள் புதுப்புது சிந்தனைகளை வளர்த்து மேம்பட வைக்கிறது. மேலும் இந்த ஒரு செயல் பாடு மூலம் அ